/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திருச்செந்தில் கோட்டத்தில் சூரசம்ஹாரப் பெருவிழா
/
திருச்செந்தில் கோட்டத்தில் சூரசம்ஹாரப் பெருவிழா
ADDED : அக் 02, 2025 12:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; ஈச்சனாரி கச்சியப்பர் மடாலயம், திருச்செந்தில் கோட்டத்தில் 48ம் ஆண்டு மகா கந்தசஷ்டி சூரசம்ஹாரப் பெருவிழா, 22ம் தேதி துவங்குகிறது.
அன்றைய தினம் காலை 8 மணிக்கு, கணபதி வேள்வி, கொடியேற்றம், காப்பு கட்டுதலுடன் விழா துவங்குகிறது. 24ம் தேதி மாலை 6 மணிக்கு, 108 திருவிளக்கு வழிபாடு நடக்கிறது.
27ம் தேதி காலை 7 மணிக்கு சத்ரு சம்ஹார வேள்வியும், மாலை 4 மணிக்கு சூரசம்ஹாரமும் நடக்கிறது. 28ம் தேதி காலை 10 மணிக்கு, வள்ளி, தெய்வானை சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணம், மதியம் 12 மணிக்கு அலங்கார பூஜை, அன்னதானம் நடக்கிறது. 29ம் தேதி காலை 11 மணிக்கு, மஞ்சள் நீர், மறு பூஜை நடக் கிறது.