/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெண் பாலியல் பலாத்காரம்; தந்தையின் நண்பர் கைது
/
பெண் பாலியல் பலாத்காரம்; தந்தையின் நண்பர் கைது
ADDED : ஜூலை 27, 2025 10:32 PM

பாலக்காடு; பாலக்காடு அருகே, இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தில், தந்தையின் நண்பரை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஆலத்தூர் எரிமயூர் பகுதியைச் சேர்ந்தவர் பாபுஜான் 52. இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.
அதே நிறுவனத்தில் பணியாற்றும் நண்பனின், மகளை பாலியல் பலாத்காரம் செய்து அதை மொபைல் போனில் வீடியோ எடுத்து அச்சுறுத்தி வந்துள்ளார்.
இதை அப்பெண், பெற்றோரிடம் தெரிவித்தார். இது தொடர்பாக பெண்ணின் பெற்றோர் ஆலத்துார் போலீசில் புகார் அளித்தனர்.
வழக்குப்பதிவு செய்து டி.எஸ்.பி., முரளீதரனின் தலைமையிலான போலீசார் பாபுஜானை நேற்று கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர் செய்து அவரை சிறையில் அடைத்தனர்.
டி.எஸ்.பி., முரளீதரன் கூறியதாவது:
ஒரு விபத்தில் சிக்கி பெண்ணின் தந்தை படுகாயம் அடைந்தார். அவரின் சிகிச்சைக்குத் தேவையான வசதிகளை செய்து தர, அந்நிறுவனம் பாபுஜானிடம் பொறுப்பு அளித்தது.
இதை சாதகமாக்கிக் கொண்டு அடிக்கடி நண்பனின் வீட்டிற்கு சென்ற பாபுஜான், பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
அத்தோடு அதை மொபைல் போனில் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ காட்சிகளை காண்பித்து அச்சுறுத்தியும் பெண்ணை பல்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்து வந்தார்.
அவரது கொடுமை தாங்க முடியாமல், தற்கொலை செய்ய முயன்ற பெண், பெற்றோரிடம் இத்தகவலை தெரிவித்தார். பெற்றோர் அளித்த புகாரில் பாபுஜானை கைது செய்துள்ளோம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.