ADDED : ஆக 12, 2025 09:25 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை, ; கோவை சிவானந்தபுரம், நான்காவது வீதியை சேர்ந்தவர் வெங்கடேஷ், 45. இவரும் மனைவியும் பணிக்கு சென்று விட்ட நிலையில், வீட்டில் தனியாக இருந்த அவரது பாட்டி சரஸ்வதியை தாக்கி, பீரோவில் இருந்த எட்டரை பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
தகவல் அறிந்த வெங்கடேஷ், சரஸ்வதியை தனியார் மருத்துவமனையில் அனுமதித்து விட்டு, சரவணம்பட்டி போலீசாரிடம் புகார் அளித்தார்.
வழக்கு பதிந்த போலீசார் நடத்திய விசாரணையில், வெங்கடேஷ் வீட்டின் அருகில் உள்ள தீபா, 37 என்பவர் நகைப்பறிப்பில் ஈடுபட்டது தெரிந்தது. அவரை சிறையில் அடைத்தனர்.