/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெண்ணுக்கு அரிவாள் வெட்டு; முன்னாள் காதலனுக்கு வலை
/
பெண்ணுக்கு அரிவாள் வெட்டு; முன்னாள் காதலனுக்கு வலை
பெண்ணுக்கு அரிவாள் வெட்டு; முன்னாள் காதலனுக்கு வலை
பெண்ணுக்கு அரிவாள் வெட்டு; முன்னாள் காதலனுக்கு வலை
ADDED : ஆக 31, 2025 11:31 PM
போத்தனூர்; கோவை குனியமுத்தூர் ரைஸ் மில் ரோட்டை சேர்ந்த, 25 வயது பெண் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன் சேலம் கொண்டலாம்பட்டியை சேர்ந்த தினேஷ், 30 என்பவரை காதலித்து வந்தார். அவரது நடவடிக்கை பிடிக்காததால் பழகுவதை தவிர்த்தார்.
2022-ல் பெண்ணை கொலை செய்ய முயன்று சிக்கினார். இதுகுறித்த வழக்கு தற்போது நடந்து வருகிறது. இந்நிலையில், அப்பெண் தனது வீட்டின் அருகேயுள்ள கடையில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தார்.
திடீரென அங்கு வந்த தினேஷ், தன்னிடமிருந்த அரிவாளால் அப்பெண்ணின் பின் தலையில் வெட்டிவிட்டு தப்பியோடினார். அருகேயிருந்தோர் அப்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தினேஷை தேடுகின்றனர்.