/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மது போதையில் ஆட்டோ டிரைவர் விபத்தில் சிக்கி பெண் பரிதாப பலி
/
மது போதையில் ஆட்டோ டிரைவர் விபத்தில் சிக்கி பெண் பரிதாப பலி
மது போதையில் ஆட்டோ டிரைவர் விபத்தில் சிக்கி பெண் பரிதாப பலி
மது போதையில் ஆட்டோ டிரைவர் விபத்தில் சிக்கி பெண் பரிதாப பலி
ADDED : ஜூன் 19, 2025 11:57 PM
கோவை, : கோவை சித்தாபுதுார் பகுதியில் ஆட்டோ மோதி, பெண் பலியானார்.
கோவை, மைல்கல் பகுதியை சேர்ந்தவர் பூவாத்தாள், 50; சித்தாபுதுார் பகுதியில் வீட்டு வேலை செய்து வருகிறார். நேற்று மதியம், வீட்டு வேலைக்காக சித்தாபுதுார் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அவ்வழியாக வந்த ஆட்டோ, வேகத்தடையின் மீது ஏறியபோது, கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் அங்கு நடந்து சென்று கொண்டிருந்த பூவாத்தாள் ஆட்டோ அடியில் சிக்கிக்கொண்டார். இதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதைப்பார்த்த அப்பகுதியினர் ஆட்டோ ஓட்டுநரை மீட்டனர். அப்போது, அவர் மது போதையில் இருந்தது தெரியவந்தது. போக்குவரத்து புலனாய்வு போலீசார் பூவாத்தாள் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆட்டோவை ஓட்டி வந்த சித்தாபுதுாரை சேர்ந்த தங்கவேல், 46 என்பவர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.