/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கொலை வழக்கில் தேடப்பட்ட பெண் சிறையிலடைப்பு
/
கொலை வழக்கில் தேடப்பட்ட பெண் சிறையிலடைப்பு
ADDED : மே 05, 2025 03:52 AM

கோவை: துபாய் டிராவல்ஸ் உரிமையாளர் கொலையில், தேடப்பட்டு வந்த பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை, காந்தி மாநகரை சேர்ந்தவர் தியாகராஜன், 69, மனைவியை பிரிந்து வாழும், இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த, கணவரை பிரிந்து வாழும் கோமதி, 52, என்பவருக்கும் தொடர்பு இருந்தது.
கோமதிக்கு நீலா, 33, சாரதா, 32, என, இரு மகள்கள் உள்ளனர். சாரதா, துபாய்க்கு வேலைக்கு சென்றபோது, அங்கு டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்த, திருவாரூரை சேர்ந்த சிகாமணி, 47, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இருவருக்குமிடையே பணம் கொடுக்கல் - வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டதால், கோபித்துக் கொண்டு சாரதா கோவை வந்தார்.
சாரதா, தாய் கோமதி, தியாகராஜன் ஆகியோர், சிகாமணியை கொல்ல திட்டமிட்டு, தியாகராஜனின் நண்பரான நெல்லை ரவுடி புதியவனை உதவிக்கு அழைத்தனர்.
ஏப்., 21ம் தேதி சாரதாவை சமாதானப்படுத்த, கோவை வந்த சிகாமணியை, மதுவில் துாக்க மாத்திரைகளை, கலந்து கொடுத்து கொலை செய்தனர். சிகாமணியை காணவில்லை என, அவரது மனைவி பிரியா, பீளமேடு போலீசில் புகார் அளித்தார்.
விசாரணையில், சிகாமணி கொலை செய்யப்பட்டதை அறிந்த போலீசார், தியாகராஜன், கோமதி, நீலா, உறவினரான ஈரோட்டை சேர்ந்த சுவாதி, 26, மற்றும் புதியவன், ஆகியோரை கைது செய்தனர்.
சாரதாவை பிடிக்க, இன்ஸ்பெக்டர் நிர்மலா தலைமையில், தனிப்படை ஏற்படுத்தப்பட்டது.
அவர், கோவை மணியகாரன்பாளையம் பகுதியில், உறவினர் வீட்டில் பதுங்கியிருப்பது தெரிந்தது.
இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.