/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரிய ரத்த வகை பெண்ணுக்கு வயிற்றில் மெகா கட்டி அகற்றம்
/
அரிய ரத்த வகை பெண்ணுக்கு வயிற்றில் மெகா கட்டி அகற்றம்
அரிய ரத்த வகை பெண்ணுக்கு வயிற்றில் மெகா கட்டி அகற்றம்
அரிய ரத்த வகை பெண்ணுக்கு வயிற்றில் மெகா கட்டி அகற்றம்
ADDED : அக் 25, 2025 02:04 AM

அவிநாசி: கோவை, நேரு நகரை சேர்ந்த ராஜலட்சுமி, 41, இரண்டு மாதமாக வயிற்று வலியால் அவதிப்பட்டார். அவிநாசி அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில், ராஜலட்சுமி கர்ப்பப்பையில், 2.7 கிலோ கட்டி இருந்ததை அறிந்து, அகற்ற முடிவு செய்தனர்.
அவரது ரத்த வகை, 'ஓ பாசிடிவ் - பாம்பே' ரத்த பிரிவை சேர்ந்தது. தமிழகம் முழுதும் இந்த ரத்த வகை உள்ள நபர்களை கண்டறிந்தனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒருவரிடம், 'ஓ பாசிடிவ் - பாம்பே' ரத்த பிரிவு ஒரு யூனிட் தானம் பெற்று 17ம் தேதி, அவிநாசி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து, கட்டி முழுதுமாக கர்ப்பப்பையுடன் அகற்றப்பட்டது.
மருத்துவ அலுவலர் கண்ணன் மஹராஜ் கூறுகையில், ''இந்தியாவில் ஆயிரத்துக்கும் குறைவானவர்களே இந்த ரத்தப்பிரிவை கொண்டவர்கள். தமிழகத்தில், 105 பேர் மட்டுமே இந்த ரத்த பிரிவை கொண்டுள்ளனர். உடனடியாக ரத்தம் கிடைத்து அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்துள்ளோம்,'' என்றார்.

