/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெண்ணுக்கு ஆபாச படம் அனுப்பிய இளைஞர் கைது
/
பெண்ணுக்கு ஆபாச படம் அனுப்பிய இளைஞர் கைது
ADDED : அக் 25, 2025 12:59 AM
கோவை: இளம்பெண் போட்டோவை, ஆபாசமாக மார்பிங் செய்து, அனுப்பிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கவுண்டம்பாளையம், மேட்டுப்பாளையம் ரோட்டை சேர்ந்தவர் மணிகண்டன்,24; தனியார் நிறுவன ஊழியர். அவருடன் மதுரையை சேர்ந்த, 24 வயது பெண் பணியாற்றி வருகிறார். இருவரும் இன்ஸ்டாகிராமில் நட்பாக பேசி வந்தனர். இந்நிலையில், இன்ஸ்டாகிராமிலுள்ள அந்த பெண்ணின் போட்டோவை காப்பி செய்து, நிர்வாணமாக மார்பிங் செய்துள்ளார். அந்த ஆபாச போட்டோவை போலியான ஐ.டி., உருவாக்கி, அதிலிருந்து அந்த பெண்ணுக்கு அனுப்பியுள்ளார்.
அதிர்ச்சியடைந்த அந்த பெண், கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரித்து, மணிகண்டனை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

