/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தமிழ்ச் சங்க விழாவில் சாதனை மகளிர் கவுரவிப்பு
/
தமிழ்ச் சங்க விழாவில் சாதனை மகளிர் கவுரவிப்பு
ADDED : மார் 19, 2024 10:42 PM
அன்னூர்:கவையன்புத்தூர் தமிழ்ச் சங்கம் சார்பில், முப்பெரும் விழா நடந்தது.
கவையன்புத்தூர் தமிழ்ச் சங்கம், சார்பில், பி.பி. ஜி. கலை அறிவியல் கல்லூரியில், முப்பெரும் விழா நடந்தது.
விழாவில் அகழ்வாய்வு அறிஞர் மணிமேகலை தலைமை வகித்து பேசுகையில், நேற்றைய வரலாறு தெரியாவிட்டால், இன்றைய வரலாறு இருண்ட காலமாகிவிடும்.
இன்றைய நடப்பு தெரியாவிட்டால், நாளைய வாழ்வு நம்பிக்கையற்று போய்விடும். எனவே வாழ்ந்த சுவடுகளை அறிந்து கொண்டு, நாம் வாழும் நிலையை வளமாக்க வேண்டும். வரலாறு நமக்கு ஒரு வலுவான வழிகாட்டுதல், என்றார்.
பணி நிறைவு பெற்ற தலைமையாசிரியை சாந்தி பேசுகையில், இன்றைய சூழலில் தமிழை வளர்ப்பது பெரும் பாடாக உள்ளது. படைப்பாற்றல் உள்ள இளைஞர்கள் பெண்களை அடையாளம் கண்டு மேடை ஏற்றி ஊக்குவிக்க வேண்டும், என்றார்.
உதவி பேராசிரியை மேரி ஜீவிதா, யசோதா, தாமரை, துவக்கப்பள்ளி தாளாளர் பிரியதர்ஷினி ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் பேசினர்,
திருப்பூர் நகராட்சி பள்ளி பட்டதாரி ஆசிரியை கல்பனா, கொத்தடிமை மீட்பு ஆர்வலர் நித்யா ஸ்ரீ, பழங்குடியினருக்காக பணியாற்றி வரும் நாகமணி, அகழாய்வு துறையைச் சேர்ந்த மணிமேகலை, சத்துணவு துறையில் சாதித்த பொன்னம்மாள், அன்னூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சித்ரா ஆகியோர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
நிகழ்ச்சியில், செயலாளர் கணேசன், நிர்வாகிகள், ஆசிரியைகள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

