ADDED : நவ 22, 2026 10:39 PM

அ நிறம் | அளவு
கவுண்டம்பாளையம்: மேட்டுப்பாளையம் ரோடு, பெண்கள் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐ.டி.ஐ.,) அகில இந்திய தொழில் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பட்டமளிப்பு விழா மற்றும் அகில இந்திய அளவில் அதிக மதிப்பெண் பெற்ற பயிற்சியாளர்கள் மற்றும் பயிற்றுநர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
முதல்வர் ஆனந்தகுமார் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் கோவை மண்டல பயிற்சி இணை இயக்குனர் வேல்முருகன், அரசு தொழிற்பயிற்சி நிலைய மேலாண்மை குழு தலைவர் ரகுநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். உதவி பயிற்சி அலுவலர் சுமதி நன்றி கூறினார்.
