ADDED : மார் 16, 2026 05:24 AM
அ நிறம் | அளவு
கோவை: உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, பாரதியார் பல்கலை, உலகத் தமிழ் நெறிக்கழகம் மற்றும் திருக்குறள் உலகம் கல்விச்சாலை இணைந்து, அனைத்துக் கல்லுாரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி நடத்தப்படுகிறது.
வரும், 27ம் தேதி பல்கலை அரங்கில் நடக்கும் இந்த போட்டியில், வெற்றி பெறும் மாணவர்களுக்கு, முதல் பரிசு --ரூ.3000, இரண்டாம் பரிசு ரூ.2000, மூன்றாம் பரிசு ரூ.-1000 வழங்கப்படுகிறது. மேலும், திருக்குறள் கூறும் 'மங்கலச்சிற்பியர்' விருதுக்கான சான்றிதழும் வழங்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் அனைத்து கல்லுாரி மாணவர்களும் பங்கேற்கலாம் என, பாரதியார் பல்கலை தமிழ்த்துறை தலைவர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
