/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'மகளிர் குழு பொருட்களை ஆன்லைனில் விற்கணும்'
/
'மகளிர் குழு பொருட்களை ஆன்லைனில் விற்கணும்'
ADDED : மார் 16, 2025 12:19 AM
கோவை: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், மகளிர் சுய உதவி குழுக்களின் தயாரிப்பு பொருட்களின் வாங்குவோர் மற்றும் விற்பனையாளர் சந்திப்பு கூட்டம், கோவையில் நேற்று நடந்தது. 90 மகளிர் குழுவினர் பங்கேற்று, உணவு வகைகள், உடைகள், பரிசு பொருட்கள், பொம்மைகள், தினமும் பயன்படுத்தும் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
நிகழ்ச்சியில், கலெக்டர் பவன்குமார் பேசியதாவது:
மகளிர் குழுவினரின் உற்பத்தி பொருட்கள் சந்தைப்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. 49 விற்பனையாளர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இன்றைய கால கட்டத்தில் பெரும்பாலான பொருட்களை, 'ஆன்லைனில்' மக்கள் வாங்குகிறார்கள். தரம், பேக்கிங் நன்றாக இருந்தால், இணைய வழியில் சந்தைப்படுத்துவது எளிதாக இருக்கும். உற்பத்தி பொருட்களை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
இவ்வாறு, கலெக்டர் பேசினார்.
நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் மதுரா, உதவி திட்ட அலுவலர் கிருஷ்ணகுமார், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை கோவை மாவட்ட செயலாளர் செந்தில்குமார் மற்றும் சுய உதவி குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.