/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ஆராய்ச்சி செயல்பாடுகளில் மகளிர் பங்களிப்பு குறைவு'
/
'ஆராய்ச்சி செயல்பாடுகளில் மகளிர் பங்களிப்பு குறைவு'
'ஆராய்ச்சி செயல்பாடுகளில் மகளிர் பங்களிப்பு குறைவு'
'ஆராய்ச்சி செயல்பாடுகளில் மகளிர் பங்களிப்பு குறைவு'
ADDED : நவ 09, 2024 11:35 PM

கோவை: கோவை நிர்மலா மகளிர் கல்லுாரியின் 40வது பட்டமளிப்பு விழா கல்லுாரி அரங்கில் நேற்று நடந்தது.
இதில், தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் உறுப்பினர் செயலர் வின்சென்ட் தலைமைவகித்து மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார். அவர் பேசியதாவது:
பெண்களின் மேம்பாடு என்பது நாட்டின் பொருளாதாரத்தில் பெரிய நேர்மறையாக மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் கல்வி கற்பது, ஒட்டுமொத்த பரம்பரையும் கற்றது போன்ற தாக்கத்தை ஏற்படுத்தும். ஆராய்ச்சிகளில் பெண்களின் பங்களிப்பு அதிகம் தேவை. அறிவியல், தொழில்நுட்ப கவுன்சில் ஆண்டுதோறும் ஆராய்ச்சியாளர்களுக்கு விருதுகள் வழங்கிவருகிறது. அதை ஆய்வு செய்த போது, 6 சதவீதம் பேர் மட்டுமே பெண்கள் உள்ளனர்.
ஆராய்ச்சிகள் என்பது ஆண்களுக்கு மட்டுமானது அல்ல; பெண்கள் தனது பங்களிப்பை அதிகரிக்கவேண்டும். முதுநிலைக்கு பின், முனைவர் பட்டம் அதிகளவில் பெண்கள் பெறவேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
கல்லுாரி செயலர் குழந்தை தெரேஸ், முதல்வர் பபியோலா, பேராசிரியர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.