UPDATED : மே 08, 2026 11:42 PM
ADDED : மே 08, 2026 11:32 PM
அ நிறம் | அளவு
கோவை: சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வழக்கு பணியாளர், தகவல் தொழில்நுட்ப பணியாளர், பாதுகாவலர், பல்நோக்கு உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகம் பழைய கட்டிடம், கீழ்தளம், கோவை-18 என்ற முகவரிக்கு மே 30-க்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
பணியிடங்கள், கல்வித் தகுதிகள் மற்றும் விண்ணப்பப் படிவம் தொடர்பான விவரங்கள் மாவட்ட இணையதளமான https://coimbatore.nic.in/ ல் இடம்பெற்றுள்ளன.
