/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரயில்வே யார்டில் பணிகள் ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்
/
ரயில்வே யார்டில் பணிகள் ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்
ரயில்வே யார்டில் பணிகள் ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்
ரயில்வே யார்டில் பணிகள் ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்
ADDED : ஜூன் 16, 2025 10:13 PM
கோவை; போத்தனுார் ரயில்வே யார்டில், பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதால், ரயில்கள் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நாளை மேட்டுப்பாளையம் - போத்தனுார்(66615) மெமு ரயில், கோவை வரை மட்டுமே இயக்கப்படும். போத்தனுார் - மேட்டுப்பாளையம்(66616) மெமு ரயில் கோவையில் இருந்து மாலை 3:45 மணிக்கு புறப்படும்.
வரும் 19ம் தேதி, கண்ணுார் - கோவை(16607), மதுரை - கோவை(16722) எக்ஸ்பிரஸ் ரயில்கள், சொரனுார் - கோவை(56604) பயணிகள் ரயில், போத்தனுார் வரை மட்டுமே இயக்கப்படும். மேட்டுப்பாளையம் - போத்தனுார்(66615) மெமு ரயில் கோவை வரை மட்டுமே இயக்கப்படும்.
கோவை - கண்ணுார்(16608), கோவை - மதுரை(16721), கோவை - சொரனுார்(56603) ஆகிய ரயில்கள் போத்தனுாரில் இருந்து புறப்படும்.
போத்தனுார் - மேட்டுப்பாளையம் (66616) மெமு ரயில் கோவையில் இருந்து மாலை 3:45 மணிக்கு புறப்படும்.