ADDED : அக் 17, 2026 03:54 PM
கோவை: மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் காலியாக உள்ள உதவி வரவேற்பாளர் பணியிடத்துக்கு, தகுதியுள்ள பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்பணியிடம் சுழற்சி முறையில் எஸ்.சி., பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. முழுமையான பார்வைத்திறன் குறைபாடு, 8ம் வகுப்பு தேர்ச்சி, 40 வயதுக்குட்பட்டவர் விண்ணப்பிக்கலாம். நாற்காலிக்கு ஒயர் பின்னும் தொழிலில் ஓராண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை, ஊதிய நிலை 2ன் அடிப்படையில் வழங்கப்படும்.
வேலைவாய்ப்பு பதிவு அட்டை (பதிவு செய்திருந்தால்), ஜாதிச்சான்று, தேசிய அடையாள அட்டை, தனித்துவ அடையாள அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டை மற்றும் இரண்டு பாஸ்போர்ட் அளவு படங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில், வரும் 21ம் தேதி மாலை 5:00 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.
