/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சட்டசபை தேர்தல் பணியில் 19 ஆயிரம் பேர் ஊழியர்களின் விவரம் சேகரிக்கும் பணி துவக்கம்
/
சட்டசபை தேர்தல் பணியில் 19 ஆயிரம் பேர் ஊழியர்களின் விவரம் சேகரிக்கும் பணி துவக்கம்
சட்டசபை தேர்தல் பணியில் 19 ஆயிரம் பேர் ஊழியர்களின் விவரம் சேகரிக்கும் பணி துவக்கம்
சட்டசபை தேர்தல் பணியில் 19 ஆயிரம் பேர் ஊழியர்களின் விவரம் சேகரிக்கும் பணி துவக்கம்
ADDED : டிச 30, 2025 05:01 AM
கோவை: நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கு, கோவை மாவட்டத்திலுள்ள அரசு ஊழியர்கள், உள்ளாட்சி அமைப்பு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள், 19,000 பேர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அதற்கான தேர்வுப் பணிகள் துவங்கிஉள்ளன.
தமிழக சட்டசபை தேர்தல் பணிகள் அடுத்த ஒரு சில மாதங்களில் துவங்கிவிடும். கோவை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலராக, கலெக்டர் பவன்குமார் இருந்து வருகிறார். கோவையிலுள்ள 10 சட்டசபை தொகுதிகளுக்கான தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வாக்காளர் கணக்கெடுப்பு பணிகளின் போதே நியமிக்கப்பட்டனர்.
சட்டசபை தேர்தல் பணியில் ஈடுபடுத்த ஆசிரியர்கள், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள், அரசு ஊழியர்களை அடையாளப்படுத்தி தேர்வு செய்யும் பணியை, மாவட்ட தேர்தல் பிரிவு மேற்கொண்டுள்ளது.
இதற்காக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மண்டல தேர்தல் நடத்தும் அலுவலர்கள், ஓட்டுச்சாவடி முதன்மை தேர்தல் நடத்தும் அலுவலர், ஓட்டுச்சாவடி தேர்தல் நடத்தும் அலுவலர் 1,2,3, உதவி ஓட்டுச்சாவடி அலுவலர்கள்...இப்படி ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது.
இதில் பெரும்பாலும் வருவாய்த்துறை ஊழியர்கள், மாநகராட்சி பணியாளர்கள், ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். சில இடங்களில் கல்லுாரி பேராசிரியர்கள் மற்றும் பல்கலை அலுவலர்களும் நியமிக்கப்பட உள்ளனர்.
மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:
கோவையில் தற்போது, 3,563 ஓட்டுச்சாவடிகள் உள்ள, ஒரு ஓட்டுச்சாவடிக்கு 4 பேர் வீதம் தேர்வு செய்ய வேண்டும். அது தவிர, 20 சதவீதம் பேர் உபரியாக தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அதற்காக மொத்தம்,19,000 பேரை தேர்வு செய்து பணியமர்த்த இருக்கிறோம்.
அதற்கான கணக்கெடுப்பு பணிகளும், அதை கம்ப்யூட்டரில் பதிவேற்றும் பணிகளும் நடந்து வருகிறது. ஓட்டுப்பதிவு நாளில், எந்த ஓட்டுச்சாவடியில் எந்த ஊழியரை நியமிப்பது என, கணினி மூலமாக தேர்வு செய்யப்படும். தேர்வாகும் ஊழியர்களுக்கு, மூன்று கட்ட பயிற்சி அளிக்கப்படும்.
இவ்வாறு, அவர்கள் கூறினார்.

