/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குப்பை கிடங்கில் 25 ஆயிரம் மரக்கன்று நடும் பணி துவக்கம்
/
குப்பை கிடங்கில் 25 ஆயிரம் மரக்கன்று நடும் பணி துவக்கம்
குப்பை கிடங்கில் 25 ஆயிரம் மரக்கன்று நடும் பணி துவக்கம்
குப்பை கிடங்கில் 25 ஆயிரம் மரக்கன்று நடும் பணி துவக்கம்
ADDED : ஏப் 08, 2025 05:44 AM
கோவை; சிறுதுளி அமைப்புடன் இணைந்து, வெள்ளலுார் குப்பை கிடங்கு வளாகத்தில், 25 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியை, மாநகராட்சி நேற்று துவக்கியது.
கோவை நகர் பகுதியில் சேகரமாகும் குப்பை, வெள்ளலுார் கழிவு நீர் பண்ணை வளாகத்தில், 150 ஏக்கரில் கொட்டப்படுகிறது. நிலத்தடி நீர், சுற்றுச்சூழல் மாசுப்பட்டிருக்கிறது. எந்நேரமும் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், 4,200 மரக்கன்றுகள், சாலையின் இரு புறமும், 800 மரக்கன்றுகள் நடப்பட்டு, பராமரிக்கப்படுகின்றன.
அடுத்த கட்டமாக, 10 ஏக்கர் பரப்பளவில், 25 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி நேற்று துவக்கப்பட்டது; மேயர் ரங்கநாயகி, கலெக்டர் துவக்கி வைத்தனர்.
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் முன்னிலை வகித்தார். வேம்பு, பூவசரன், மருதம், புங்கன், இலுப்பை மற்றும் வாகை உள்ளிட்ட, 64 வகையான நாட்டு ரக மரக்கன்றுகள் நட்டு, பராமரிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இக்கிடங்கில், தினமும், 250 டன் மக்கும் குப்பையில் 'பயோ காஸ்' தயாரிக்கும் மையம், 69.20 கோடி ரூபாயில் தனியார் பங்களிப்புடன் அமைக்கும் பணி, விரைவில் துவங்க இருக்கிறது.
மக்கும் குப்பையில், மின்சாரம் தயாரிக்கும் திட்ட பணிகள் நடந்து வருகின்றன. 12 தீயணைப்பு கருவிகள் பொருத்தப்பட்ட, டீசல் நிரப்பிய மோட்டார்கள், ஒரு தீயணைப்பு வாகனம், 4 தண்ணீர் டேங்கர் லாரிகள், தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. குப்பை கிடங்கு செயல்பாடுகளை கண்காணிக்க, துணை கமிஷனர் தலைமையில், 15 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருக்கிறது.
மரக்கன்று நடும் நிகழ்ச்சியில், 'சிறுதுளி' அமைப்பின் அறங்காவலர் சதீஷ், ஒருங்கிணைப்பாளர் சின்னச்சாமி, துணை மேயர் வெற்றிச்செல்வன், மண்டல தலைவர் தனலட்சுமி, உதவி நகர் நல அலுவலர் பூபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.