/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஊராட்சி ஒன்றியங்களில் இன்று பணி புறக்கணிப்பு போராட்டம்
/
ஊராட்சி ஒன்றியங்களில் இன்று பணி புறக்கணிப்பு போராட்டம்
ஊராட்சி ஒன்றியங்களில் இன்று பணி புறக்கணிப்பு போராட்டம்
ஊராட்சி ஒன்றியங்களில் இன்று பணி புறக்கணிப்பு போராட்டம்
ADDED : மார் 18, 2025 04:18 AM
அன்னுார்: ஊராட்சி ஒன்றியங்களில், இன்று ஒரு மணி நேரம் பணி புறக்கணிப்பு போராட்டம் நடைபெறுகிறது.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், அரசின் கவனத்தை ஈர்க்க, பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படுகிறது. இதில் ஒரு கட்டமாக, இன்று (18ம் தேதி) ஊராட்சி ஒன்றியங்களில், மாலை ஒரு மணி நேரம் பணியை புறக்கணித்து, அலுவலகத்தை விட்டு வெளிநடப்பு செய்வது என அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் முத்துராஜ், செயலாளர் விஜயகுமார் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை :
கிராம சபை கூட்டத்தை விடுமுறை நாட்களில் நடத்துவதால் ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள், அலுவலர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
எனவே, கிராம சபை கூட்டத்தை வேலை நாட்களில் நடத்த வேண்டும். வருகிற 23ம் தேதி ஞாயிறன்று நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தை மற்றொரு வேலை நாளில் நடத்த வேண்டும்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி, கோவை மாவட்டத்தில், 12 ஊராட்சி ஒன்றியங்களிலும், 228 ஊராட்சிகளிலும், 18ம் தேதி (இன்று) மாலை ஒரு மணி நேரம் பணியை புறக்கணித்து அலுவலகத்தை விட்டு வெளிநடப்பு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
வருகிற 20-ம் தேதி 20 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் ஊரக வளர்ச்சித் துறை ஆணையர் அலுவலகத்தில் பெருந்திரள் முறையீடு செய்வது, ஏப். 23ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.