/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரங்கநாதர் கோவில் தேருக்கு ெஷட் அமைக்கும் பணி தொய்வு
/
அரங்கநாதர் கோவில் தேருக்கு ெஷட் அமைக்கும் பணி தொய்வு
அரங்கநாதர் கோவில் தேருக்கு ெஷட் அமைக்கும் பணி தொய்வு
அரங்கநாதர் கோவில் தேருக்கு ெஷட் அமைக்கும் பணி தொய்வு
ADDED : ஆக 06, 2025 09:59 PM
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவில் தேருக்கு, ெஷட் அமைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம், காரமடை அரங்கநாதர் கோவில். இந்த கோவிலின் தேர் திருவிழா முடிந்த பின், தேர் சுற்றி தகர சீட்டால் அமைக்கப்படும். தகர சீட்டுகள் துருப்பிடித்திருந்ததால், புதிய ஷெட் அமைக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்தது.
இதற்காக நான்கு பக்கமும் நில மட்டம் வரை கான்கிரீட் பில்லர்கள் அமைத்து, பில்லர்கள் மீது, நான்கு பக்கம், 30 அடிக்கு நான்கு இரும்பு ஆங்கில்கள் அமைத்து, சுற்றியும் ஜிங் சீட் அமைக்கப்படும். இடையில் பிளாஸ்டிக் கண்ணாடி சீட் அமைத்து அதன் நடுவே, பாதுகாப்புடன் தேரை நிறுத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. தேர்த் திருவிழா முடிந்து, ஆறு மாதங்கள் ஆகியும், இன்னும் தேருக்கு ெஷட் அமைக்கவில்லை. அந்த பணிகள் மிகவும் மெதுவாக நடைபெறுகின்றன.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: காரமடை அரங்கநாதர் கோவில் தேருக்கு, பாதுகாப்பு ெஷட் அமைக்க கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது.
ஆனால் அந்த பணிகளை, ஆறு மாதங்கள் ஆகியும் இன்னும் முடிக்காமல், காலம் கடத்தி வருகின்றனர். கோவில் நிர்வாகம் செய்யும் பணிகளை பார்த்தால், அடுத்த மாசி மகத் தேர்த்திருவிழாவுக்குள், தேருக்கு ெஷட் செய்து முடிப்பார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அந்த அளவிற்கு பணிகள் மிகவும் மெதுவாக நடைபெறுகின்றன.
எனவே மாவட்ட ஹிந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள், நடவடிக்கை எடுத்து உடனடியாக, இரும்பு ஆங்கிளை சுற்றியும், ஜிங் சீட் அமைத்து, தேரை ெஷட்டின் உள்ளே வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு சமூக ஆர்வலர்கள் கூறினர்.