தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் கேமரா பொருத்தும் பணிகள் 'ஓவர்'

 ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் கேமரா பொருத்தும் பணிகள் 'ஓவர்'

 ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் கேமரா பொருத்தும் பணிகள் 'ஓவர்'


ADDED : ஏப் 27, 2026 10:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 27, 2026 10:22 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில், கேமரா பொருத்தும் பணிகள் முடிந்தது. அதன் செயல்பாடுகள் குறித்து பரிசோதித்து, ஏ.ஐ., சாப்ட்வேரில் தகவல் உள்ளீடு செய்யும் பணிகள் நடக்கின்றன.

உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தில், மேற்புறம் 60 கி.மீ., வேகத்திலும், ஏறுதளம், இறங்குதளத்தில் 30-40 கி.மீ., வேகத்தில் மட்டுமே பயணம் செய்யவேண்டும்.

அதைமீறி வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் விபத்துகள் ஏற்படுகின்றன. இதைத்தடுக்க பாலத்தில் 44 அதிநவீன கேமராக்கள், 'டிஸ்பிளே' போர்டுகள் பொருத்தப்பட்டுள்ளன.

கடந்த 25, 26ம் தேதி கேமராக்களின் செயல்பாடுகள் பரிசோதிக்கப்பட்டன. தொடர்ந்து ஒரு மாதம், தகவல் உள்ளீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'அதிவேகம், ஹெல்மெட், சீட் பெல்ட் அணியாமல் செல்வது உட்பட பத்துக்கும் மேற்பட்ட விதிமீறல்களை ஏ.ஐ.கேமரா கண்டறிந்து, வாகன எண், விதிமுறை மீறல் விபரங்களை டிஸ்ப்ளே போர்டில் உடனடியாக காண்பிக்கும்.

இதன் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தை பி.எஸ்.ஜி., டெக்., கல்லுாரி அருகில் வைத்துள்ளோம். ஏ.ஐ. சாப்ட்வேரில் விதிமுறை, கண்காணிப்பு சார்ந்த தகவல்களை உள்ளீடு செய்து வருகிறோம். ஒரு மாதம் தொடர்ந்து கேமரா செயல்பாடுகளை பரிசோதித்த பின் போக்குவரத்து போலீசாரிடம் ஒப்படைக்கப்படும்' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us