/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளிகளுக்கு புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரம்
/
பள்ளிகளுக்கு புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரம்
ADDED : செப் 23, 2025 08:45 PM

பொள்ளாச்சி,; பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு பாட புத்தகங்கள், நோட்டுகள் அனுப்பும் பணி நேற்று துவங்கியது.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில், காலாண்டு தேர்வுகள் முடிந்து விடுமுறை விடப்பட உள்ளது.
இதை தொடர்ந்து, அரசு, அரசு உதவி பெறும், நகராட்சி, ஆதிதிராவிடர் நலம், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும், 6ம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாட புத்தகங்கள், நோட்டுகள் வழங்குவதற்காக, பொள்ளாச்சி கோட்டூர் ரோடு நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருப்பு வைக்கப்பட்டன.
இந்நிலையில், பள்ளி திறப்பு நாளில் மாணவர்களுக்கு புத்தகங்கள் வினியோகிக்கும் வகையில், நேற்று முதல், இருப்பு மையத்தில் இருந்து பள்ளிகளுக்கு பாட புத்தகங்கள், குறிப்பேடுகள் வாகனங்களில் அனுப்பப்படுகின்றன.
கல்வி மாவட்ட அதிகாரிகள் கூறியதாவது:
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், அரசு உயர்நிலை, மேல்நிலை மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், நகராட்சி மற்றும் ஆதிதிராவிடர் பள்ளிகள் என மொத்தம், 87 பள்ளிகள் உள்ளன.
ஆறாம் வகுப்பு மற்றும் ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டாம் பருவ பாட புத்தகங்களும், நோட்டுகள் மற்றும் 8,9ம் வகுப்பு மாணவர்களுக்கான நோட்டுகள் வழங்கப்பட உள்ளன. மேலும், சீருடைகள் அனுப்பப்படுகின்றன.
மொத்தம், 18,900 மாணவர்களுக்கு பள்ளி துவங்கும் முதல்நாளிலேயே வழங்கும் வகையில் பாட புத்தகங்கள், நோட்டுகள் அனுப்பும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு, கூறினர்.