/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இரவு, பகலாக நடக்கிறது செம்மொழி பூங்கா வேலை
/
இரவு, பகலாக நடக்கிறது செம்மொழி பூங்கா வேலை
ADDED : நவ 22, 2025 06:52 AM

கோவை: செம்மொழி பூங்காவை வரும் 25ம் தேதி, தமிழக முதல்வர் ஸ்டாலின் திறக்க வைக்க இருக்கிறார். பணிகளை துரிதப்படுத்த, அமைச்சர் நேரு இன்று வருகிறார்.
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் தலைமையில், பொறியியல் பிரிவினர் பூங்காவில் முகாமிட்டு, பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு பொறியாளருக்கும் ஒவ்வொரு வேலை பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இரவு - பகலாக பணிகள் நடந்து வருகின்றன. பூங்கா வளாகத்துக்குள் 111 இடங்களில் இருக்கை வசதி, 11 இடங்களில் குடிநீர் வசதி செய்யப்படுகிறது. செயற்கை மலைக்குன்று மீது, செம்மொழி பூங்கா என்கிற பெயர் பலகை வைப்பதற்கான கட்டமைப்பு ஏற்படுத்தப்படுகிறது. நுழைவாயில் பகுதியில் சுற்றுச்சுவர் கட்டப்படுகிறது.
முகப்பு பகுதி மக்களை ஈர்க்கும் வகையில் அமைய, அழகுச் செடிகள், பூச்செடிகள் பதிக்கும் பணி நடந்து வருகிறது. திறப்பு விழாவுக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால், பணிகளை துரிதப்படுத்தவும், முன்னேற்றத்தை பார்வையிடவும், அமைச்சர் நேரு இன்று வருகிறார் .

