UPDATED : அக் 30, 2026 06:51 PM
ADDED : அக் 30, 2026 06:47 PM
அ நிறம் | அளவு
கோவை: மாவட்ட மகளிர் திட்டத்தில், மாவட்ட வளப் பயிற்றுநர் பண்ணை சாரா பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கு, எம்.பி.ஏ., எம்.எஸ்.டபிள்யூ., உள்ளிட்ட முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 30 வயது முதல் அதிகபட்சம் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். தொழில் முனைவோர் மேம்பாடு, அரசு திட்டங்கள், தன்னார்வ அமைப்புகள் அல்லது தனியார் நிறுவனங்களில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் அனுபவம் அவசியம்.
தகுதியுடையவர்கள் கல்வி, அனுபவ சான்றிதழ்களுடன் நவ., 13ம் தேதி மாலை 5:45 மணிக்குள், செயலாளர், கோயம்புத்தூர் மாவட்ட மகமை, வட்டார வளர்ச்சி அலுவலகம், மதுக்கரை என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம். makamaikovai@gmail.com என்ற இ-மெயிலில் அனுப்பலாம்.
