தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/விளாமரத்துார் குடிநீர் திட்ட பணிகள் தொடங்கியது

விளாமரத்துார் குடிநீர் திட்ட பணிகள் தொடங்கியது

விளாமரத்துார் குடிநீர் திட்ட பணிகள் தொடங்கியது


ADDED : பிப் 16, 2024 11:19 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 16, 2024 11:19 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. மேட்டுப்பாளையம் நகரத்திற்கு, பவானி ஆற்றிலிருந்து தினசரி 90 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுத்து, சாமன்னா நீரேற்று நிலையத்தில் சுத்திகரிப்பு செய்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்நிலையில், மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு கூடுதல் குடிநீர் கிடைக்கும் வகையில், நெல்லித்துறை ஊராட்சி விளாமரத்துாரில் பவானி ஆற்றிலிருந்து, தண்ணீர் எடுத்து சுத்திகரிப்பு செய்து, குடிநீராக விநியோகம் செய்ய விளாமரத்துார் குடிநீர் திட்டம் அறிவிக்கப்பட்டு, இத்திட்டத்திற்கு ரூ.22.20 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இத்திட்டத்திற்கான பணிகள் தற்போது தொடங்கி உள்ளன.

இதுகுறித்து மேட்டுப்பாளையம் நகராட்சி நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில், ''விளாமரத்துார் குடிநீர் திட்டத்திற்கு உண்டான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. விரைவில் இப்பணிகள் நிறைவடையும்,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us