/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பழுதான கண்காணிப்பு கேமராக்கள் : சரிசெய்து பொருத்தும் பணி தீவிரம்
/
பழுதான கண்காணிப்பு கேமராக்கள் : சரிசெய்து பொருத்தும் பணி தீவிரம்
பழுதான கண்காணிப்பு கேமராக்கள் : சரிசெய்து பொருத்தும் பணி தீவிரம்
பழுதான கண்காணிப்பு கேமராக்கள் : சரிசெய்து பொருத்தும் பணி தீவிரம்
ADDED : நவ 06, 2025 11:15 PM

வால்பாறை: வால்பாறைக்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். குறிப்பாக, தங்கும்விடுதிகளில் அதிக அளவில் தங்கி செல்கின்றனர். இந்நிலையில், நகரில் குற்ற சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க, வால்பாறை போலீஸ் ஸ்டேஷன் சார்பில், கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன், பஸ் ஸ்டாண்ட், அண்ணாதிடல், பள்ளி, கல்லுாரி வளாகம் உள்ளிட்ட முக்கியான இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.
இதனால், வால்பாறை நகரில் ஏற்படும் குற்ற சம்பவங்களை போலீசார் எளிதில் கண்டறிந்து, உரிய நடவடிக்கை எடுத்து வந்தனர். கடந்த மூன்று ஆண்டுகளாக, 32 கேமராக்களில் ஐந்து கேமரா மட்டுமே பயன்பாட்டில் இருந்தது. மீதமுள்ள கேமராக்கள் பழுதான நிலையில் இருந்தன.
இதனால், போலீசாருக்கு குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. தற்போது, செயலிழந்த கேமராக்களை சரிசெய்யும் பணி நடக்கிறது.
போலீசார் கூறியதாவது:
வால்பாறை நகரில் குற்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்கும் வகையில், 32 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. நகருக்குள் வந்து செல்லும் சிங்கவால் குரங்குகள், ஒயர்களை துண்டித்து, கேமராவை செயலிழக்க செய்தன.
இதனை தொடர்ந்து, தற்போது மாவட்ட எஸ்.பி., உத்தரவின் பேரில், பழுதான கண்காணிப்பு கேமராக்கள் அனைத்தும் சரி செய்யும் பணி நடக்கிறது. துண்டிக்கப்பட்ட ஒயர்கள் மாற்றிமைக்கப்படுகின்றன. இதே போல், வால்பாறை நகரில் குற்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க அனைத்து தங்கும் விடுதிகளிலும் கண்காணிப்பு கேமரா கட்டாயம் பொருத்த வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.

