/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
டி.எஸ்.பி. அலுவலகத்தில் மேற்கு மண்டல ஐ.ஜி. ஆய்வு
/
டி.எஸ்.பி. அலுவலகத்தில் மேற்கு மண்டல ஐ.ஜி. ஆய்வு
ADDED : நவ 06, 2025 11:17 PM

ஆனைமலை: வால்பாறை டி.எஸ்.பி. அலுவலகத்தில், மேற்கு மண்டல ஐ.ஜி. ஆய்வு செய்தார்.
ஆனைமலையில் உள்ள வால்பாறை டி.எஸ்.பி. அலுவலகத்தில் மேற்கு மண்டல ஐ.ஜி. செந்தில்குமார், ஆண்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது, அலுவலக நிர்வாக பணிகள், குற்றவியல் பதிவுகள், வழக்கு விசாரணைகள், பொதுமக்கள் மனுக்கள், போலீசாரின் நலன்கள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விரிவாக பரிசீலித்தார்.
மேலும், பொதுமக்கள் பாதுகாப்பு, போக்குவரத்து ஒழுங்கு, குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் போன்றவை வலுப்படுத்த தேவையான ஆலோசனைகளை வழங்கினார்.
போலீசார், பொதுமக்களுடன் பணியாற்றி மக்கள் நம்பிக்கையை மேலும் உயர்த்த வேண்டும் என அறிவுறுத்தினார். ஆய்வின் போது, வால்பாறை டி.எஸ்.பி. பவித்ரா மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

