/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொழில் பயிற்சி அட்மிஷன் வரும் 14 வரை நீட்டிப்பு
/
தொழில் பயிற்சி அட்மிஷன் வரும் 14 வரை நீட்டிப்பு
ADDED : நவ 06, 2025 11:18 PM
வால்பாறை: அரசினர் தொழில் பயிற்சி நிலையத்தில், வரும் 14ம் தேதி வரை நேரடி மாணவர் சேர்க்கை நடக்கிறது.
கோவை மாவட்டம் வால்பாறையில், அரசு தொழிற்பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, பிட்டர், எலக்ட்ரீசியன், பேஷன் டிசைன்,டெக்ஸ்டைல்ஸ் மெக்கட்ரானிக்ஸ் ஆகிய பாடப்பிரிவின் கீழ், மாணவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்த கல்வியாண்டில், கடந்த ஜூன் மாதம் முதல் மாணவர்கள் சேர்க்கை துவங்கியது. இருப்பினும் மொத்தம் உள்ள, 104 சீட்களுக்கு நேற்று வரை, 68 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர்.
இதனையடுத்து மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், வரும், 14 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, வால்பாறை அரசினர் தொழில் பயிற்சி நிலைய முதல்வர் நடராஜ் கூறியிருப்பதாவது:
அரசினர் தொழில் பயிற்சி நிலையத்தில் படிக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில், தமிழக அரசின் சார்பில் இலவச பஸ் பாஸ், சைக்கிள், கல்வி உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
மாணவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. உயர்கல்வி படிக்க முடியாத மாணவர்கள், தொழில் பயிற்சி நிலையத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.
மாணவர்கள் வசதிக்காக இம்மாதம், 14 ம் தேதி வரை கல்லுாரியில் நேரடி அட்மிஷன் நடக்கிறது. கல்வி சான்றிதழ்களுடன் நேரில் வந்து பயிற்சியில் சேர்ந்து கொள்ளலாம்.
இவ்வாறு, தெரிவித்துள்ளார்.
வால்பாறை மற்றும் சுற்றுப்பகுதி மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.

