/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மழைநீர் சேகரிப்பு அமைப்பு சீரமைக்கும் பணிகள் தீவிரம்
/
மழைநீர் சேகரிப்பு அமைப்பு சீரமைக்கும் பணிகள் தீவிரம்
மழைநீர் சேகரிப்பு அமைப்பு சீரமைக்கும் பணிகள் தீவிரம்
மழைநீர் சேகரிப்பு அமைப்பு சீரமைக்கும் பணிகள் தீவிரம்
ADDED : ஏப் 29, 2025 11:25 PM

மேட்டுப்பாளையம், ; மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் உள்ள அண்ணா வணிக வளாக கட்டடத்தில், மழை நீரை சேமிக்கும் பொருட்டு, மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் நிலத்தடி நீர்செறிவூட்டும் நோக்கத்திற்காக, பல்வேறு வழிமுறைகளில் மழைநீர் சேகரிப்பு திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரசு, தனியார் நிறுவனங்கள், வீடுகள், காலியிடங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் ஏற்கனவே மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் அவற்றில் சில செயல்படாத நிலையிலும், சீரமைக்காமலும் அல்லது ஏதேனும் பழுதுகளுடன் காணப்படும்.
இதனை சீர் செய்து, மீண்டும் உபயோகத்திற்கு கொண்டு வந்து மழைநீர் சேகரிப்பை அதிகப்படுத்துவதற்காக, கோவை மாவட்ட நிர்வாகம் தற்போது பணிகளை துவங்கியுள்ளது.
இதன் ஒருபகுதியாக மேட்டுப்பாளையத்தில் உள்ள அரசு கட்டடங்கள், அரசு மற்றும் தனியார் வணிக வளாகங்கள், வீடுகள் போன்ற கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் உள்ளனவா, அவை எந்த நிலையில் உள்ளது என நகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் உள்ள அண்ணா வணிக வளாக கட்டடத்தில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை சீரமைக்க அதற்கான பணிகளை மேட்டுப்பாளையம் நகராட்சி நிர்வாகம் துவங்கியுள்ளது.------