/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குல்பி விற்ற பணத்தை கேட்ட முதலாளி; கத்தியால் குத்திய தொழிலாளி கைது
/
குல்பி விற்ற பணத்தை கேட்ட முதலாளி; கத்தியால் குத்திய தொழிலாளி கைது
குல்பி விற்ற பணத்தை கேட்ட முதலாளி; கத்தியால் குத்திய தொழிலாளி கைது
குல்பி விற்ற பணத்தை கேட்ட முதலாளி; கத்தியால் குத்திய தொழிலாளி கைது
ADDED : ஆக 24, 2025 11:54 PM
கோவை; குல்பி விற்ற பணத்தை கேட்ட முதலாளியை கத்தியால் குத்த முயன்ற நபரை போலீசார் சிறையில் அடைத்தனர்.
கோவை ராமநாதபுரம் சுங்கம் பகுதியை சேர்ந்தவர் சாம்சன் கிஷோர், 26. இவர் அதே பகுதியில் குல்பி ஐஸ்கிரீம் தொழில் செய்து வருகிறார். இவரிடம் மதுரை தெற்குவாசலை சேர்ந்த விஷால்குமார், 20 என்பவர் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். குல்பி ஐஸ்கிரீம்களை தள்ளுவண்டியில் எடுத்து சென்று விஷால்குமார் தினமும் விற்பனை செய்து வந்தார்.
இந்நிலையில், கடந்த, 10 நாட்களாக விற்பனை செய்த குல்பி ஐஸ்கிரீம்களுக்கான பணத்தை விஷால்குமார், சாம்சன் கிஷோரிடம் தரவில்லை.
இதுகுறித்து அவர் கேள்வி எழுப்பினார். இதையடுத்து விஷால்குமார் அங்கிருந்து சென்று விட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் சாம்சன் கிஷோரின் வீட்டுக்கு சென்ற விஷால்குமார், சாம்சன் கிஷோரை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரை குத்தி விட்டு தப்ப முயன்றார்.
இதில், சாம்சன் கிஷோரின் இடுப்பு, காலில் பலத்த காயம் ஏற்பட்டது.சாம்சன் கிஷோர் புகாரின் பேரில் வழக்கு பதிந்த ராமநாதபுரம் போலீசார் தப்பியோடிய விஷால்குமாரை பிடித்து சிறையில் அடைத்தனர்.