ADDED : ஏப் 18, 2025 11:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே 16 வயது சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி, திருமணம் செய்த கூலித்தொழிலாளியை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி அருகே 16 வயது சிறுமி, 11ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த, இரண்டு நாட்களுக்கு முன், சிறுமி காணவில்லை என பெற்றோர், தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர். அதில், வெள்ளேகவுண்டனுாரை சேர்ந்த கூலித்தொழிலாளி சிவக்குமார், 22, சிறுமியை அழைத்துச் சென்றது தெரிய வந்தது.
அவர், சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி கேரளாவுக்கு அழைத்துச்சென்று திருமணம் செய்ததும், அவருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருப்பதும் தெரிந்தது.
இதையடுத்து, சிவக்குமாரை போக்சோ வழக்கில் தாலுகா போலீசார் கைது செய்தனர்.