/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொழிலாளி தற்கொலை; போலீசார் விசாரணை
/
தொழிலாளி தற்கொலை; போலீசார் விசாரணை
ADDED : செப் 01, 2025 10:32 PM
கோவை; கோவை, ஆவாரம்பாளையத்தில் உள்ள ஓட்டலில், 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுடன் பணிபுரிந்த, பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சுமித் குமார் பஸ்வான், சித்தாபுதுார் நந்தகோபால் தெருவில் மனைவியுடன் தங்கியிருந்தார். நேற்று மதியம் சுமித் குமார் பஸ்வான், தங்கியிருந்த வீட்டில் துப்பட்டாவால் துாக்கிட்டு இறந்த நிலையில் காணப்பட்டார்.
சடலத்தை மீட்டு, காட்டூர் போலீசார் நடத்திய விசாரணையில், சுமித் குமார் பஸ்வான் நேற்று முன்தினம் இரவு, மொபைல்போனில் பீகாரில் உள்ள உறவினர்களிடம் பேசியுள்ளார். இதுதொடர்பாக, அவருக்கும் மனைவிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சுமித் குமார் பஸ்வான் தற்கொலை செய்து கொண்டதால், போலீசார் விசாரிக்கின்றனர்.