/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காட்டு மாட்டை பார்த்த அதிர்ச்சியில் தொழிலாளி பலி
/
காட்டு மாட்டை பார்த்த அதிர்ச்சியில் தொழிலாளி பலி
ADDED : அக் 23, 2025 11:12 PM
வால்பாறை: வால்பாறை அருகே, காட்டு மாட்டை பார்த்த அதிர்ச்சியில், தோட்ட தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
வால்பாறை அடுத்துள்ளது முடீஸ் ஆனைமுடி எஸ்டேட் முதல் பிரிவு. இங்கு தோட்ட தொழிலாளியாக வேலை செய்தவர் காமாட்சி,70. இவர், நேற்று காலை சக தொழிலாளர்களுடன் 9ம் நெம்பர் எஸ்டேட்டில் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, திடீரென வந்த காட்டுமாட்டை கண்ட அதிர்ச்சியில் காமாட்சி மயங்கி விழுந்தார். ஏற்கனவே, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவருக்கு, திடீர் மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதனையடுத்து, அவரது உடல் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. காட்டுமாட்டை கண்டு அதிர்ச்சியில், தொழிலாளிக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்த சம்பவம் தொழிலாளர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வனத்துறையினர் கூறுகையில், 'எஸ்டேட்களில், யானை, காட்டுமாடுகள் முகாமிட்டிருந்தால், அங்கு தேயிலை பறிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட வேண்டாம்,' என்றனர்.

