/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆற்றில் குதித்து இறந்த தொழிலாளி
/
ஆற்றில் குதித்து இறந்த தொழிலாளி
ADDED : ஆக 17, 2025 10:10 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, பொங்காளியூரை சேர்ந்த தொழிலாளி பிரபு,31. இவர், குமார் என்பவருடன், கடந்த இரண்டு நாட்களாக சுண்டக்கடவுபதியில் சென்டரிங் வேலைக்கு சென்று வந்தார்.
நேற்றுமுன்தினம் பொன்னாலம்மன் துறை ஆற்றுபாலம் அருகே சென்றவர் வெகு நேரமாகியும் திரும்பி வராததால், கீழே சென்று பார்த்த போது அங்கே தடுக்கு மேய்ந்து கொண்டு இருந்தவர்கள், பிரபு ஆற்றுக்குள் குதித்ததாக தெரிவித்தனர்.
ஆற்றில் தேடிப்பார்த்த போது அவரது உடல் கிடைக்கவில்லை. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், தீயணைப்புத்துறையினர் ஆற்றில் தேடினர். அப்போது, தனியார் தோட்டம் அருகே தண்ணீருக்குள் மூழ்கி இறந்த நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டது. இதுகுறித்து, ஆழியாறு போலீசார் விசாரிக்கின்றனர்.

