UPDATED : ஆக 15, 2026 09:25 PM
ADDED : ஆக 15, 2026 09:14 PM
அ நிறம் | அளவு
தொண்டாமுத்தூர்:தொண்டாமுத்தூர், மாதம்பட்டி ரோட்டை சேர்ந்தவர் சீனிவாசன், 38.
இவர், பாக்கு பறிக்கும் வேலைக்கு சென்று வந்தார். திருமணமாகி மனைவியை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். சீனிவாசன் மற்றும் 5 பேர், கீழ்ச்சித்தரை சாவடி பகுதியில் வாய்க்கால் அருகே உள்ள தோட்டத்தில் பாக்கு பறிப்பதற்காக நேற்று காலை சென்றனர். சீனிவாசன், 30 அடி நீளமுள்ள அலுமினிய கொக்கி கொண்டு பாக்கு பறித்துக்கொண்டிருக்கும்போது, எதிர்பாராத விதமாக அருகில் இருந்த மின்சார கம்பியில், கொக்கி சிக்கியது. இதில் மின்சாரம் தாக்கி, சீனிவாசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தொண்டாமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
