தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தேசிய கொடி ஏற்றாத அரசு அலுவலகம்

தேசிய கொடி ஏற்றாத அரசு அலுவலகம்

தேசிய கொடி ஏற்றாத அரசு அலுவலகம்


ADDED : ஆக 15, 2026 09:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 15, 2026 09:32 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் உள்ள வணிக வரிகள் உதவி கமிஷனர் அலுவலகத்தில், சுதந்திர தினத்தன்று தேசியக்கொடி ஏற்றவில்லை.

மேட்டுப்பாளையத்தில் சிறுமுகை சாலையில், தாசில்தார் அலுவலகம் அருகே, வணிகவரி உதவி கமிஷனர் அலுவலகம் உள்ளது. தாசில்தார் அலுவலகத்தில் தேசிய கொடியேற்றப்பட்டது. வணிகவரி உதவி கமிஷனர் அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றவில்லை.

விடுமுறை நாளான நேற்று மதியம் ஒரு மணியளவில் இந்த அலுவலகம் திறந்திருந்தது. ஆனால் கட்டடத்தின் மேல் தளத்தில் உள்ள கொடிக்கம்பத்தில், தேசியக்கொடி ஏற்றவில்லை. அங்கிருந்த பணியாளர்களிடம் கேட்டபோது, எங்கள் உயர் அதிகாரி கோவை அலுவலகத்திற்கு சென்று விட்டார். அதனால் கொடியேற்றவில்லை என கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us