தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ முருக கடவுள் அவமதிப்பு கோவை வாலிபருக்கு 'கம்பி'

 முருக கடவுள் அவமதிப்பு கோவை வாலிபருக்கு 'கம்பி'

 முருக கடவுள் அவமதிப்பு கோவை வாலிபருக்கு 'கம்பி'


ADDED : ஆக 15, 2026 11:25 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 15, 2026 11:25 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெ.நா.பாளையம்: தமிழ் கடவுள் முருகனை, சமூக வலைதளங்களில் அவமதித்த நபரை, பெரியநாயக்கன்பாளையம் போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அருகே ராக்கிபாளையத்தில் வசிப்பவர் மைக்கேல் ராஜ், 31. சி.என்.சி., ஆப்பரேட்டர். இவர், தமிழ் கடவுள் முருகனை, அருவருக்கத்தக்க வார்த்தையில் விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.

இது குறித்து, கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய ஹிந்து முன்னணி பொதுச்செயலர் சங்கர், பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்தார். பொது அமைதிக்கு குத்தகம் விளைவித்து, மத மோதல்களை உருவாக்கும் மைக்கேல்ராஜ் மீது, குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குறிப்பிட்டிருந்தார்.

பா.ஜ., தமிழக தலைவர் நயினார் உள்ளிட்ட பல்வேறு கட்சி பிரமுகர்ளும், மைக்கேல் ராஜுவை கைது செய்ய வலியுறுத்தி இருந்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்த மைக்கேல்ராஜை நேற்று கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us