தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கரடி தாக்கியதில் தொழிலாளி காயம்

கரடி தாக்கியதில் தொழிலாளி காயம்

கரடி தாக்கியதில் தொழிலாளி காயம்


ADDED : ஜூன் 16, 2025 09:29 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 16, 2025 09:29 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வால்பாறை; வால்பாறை அருகே, கரடி தாக்கியதில் எஸ்டேட் தொழிலாளி படுகாயமடைந்தார்.

வால்பாறை அடுத்துள்ளது இஞ்சிப்பாறை எஸ்டேட் மேல்டிவிஷன். இங்கு தொழிலாளியாக வேலை செய்பவர் ராஜேந்திரன், 41. இவர், நேற்று முன்தினம் இரவு, அவருக்கு சொந்தமான பசுமாட்டை தொழுவத்தில் கட்டுவதற்காக சென்றார்.

அப்போது, அங்கு பதுங்கியிருந்த கரடி, திடீரென்று அவர் மீது பாய்ந்தது. அவர் கூச்சலிட்டதும் அக்கம் பக்கத்தினர் வந்தனர். சப்தம் கேட்டு கரடி வனப்பகுதிக்குள் ஓடியது. இந்த சம்பவத்தில் அவருக்கு கை, தலை உள்ளிட்ட பகுதிகளில் படுகாயம் ஏற்பட்டது.

கரடி தாக்கி படுகாயமடைந்த தொழிலாளி, மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தகவல் அறிந்த மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் கிரிதரன் தலைமையிலான வனத்துறையினர், கோவை அரசு மருத்துவமனைக்கு சென்று, பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணத்தொகையாக, ஐந்தாயிரம் ரூபாய் வழங்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us