/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காட்டுமாடு தாக்கி தொழிலாளி காயம்
/
காட்டுமாடு தாக்கி தொழிலாளி காயம்
ADDED : மார் 18, 2025 10:29 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வால்பாறை, ; வால்பாறை அருகே, பைக்கில் சென்ற தொழிலாளி, காட்டுமாடு தாக்கியதில் படுகாயமடைந்தார்.
வால்பாறை அடுத்துள்ள, அப்பர்பாரளை எஸ்டேட்டை சேர்ந்தவர் சுரேஷ்குமார், 54. இவர், எஸ்டேட்டில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். நேற்று மாலை, 6:10 மணிக்கு வால்பாறைக்கு பைக்கில் வந்த போது, எதிரே வந்த காட்டுமாடு பைக்கில் சென்ற சுரேஷ்குமாரை தாக்கியது. பின்னால் வாகனத்தில் வந்தவர்கள் அவரை மீட்டு, வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
காட்டுமாடு தாக்கியதில், சுரேஷ்குமாரின் வலது கண், கை, கால், இடுப்பு பகுதிகளில் படுகாயம் ஏற்பட்டது. வால்பாறை போலீசார் மற்றும் வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.