/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போதையில் தகராறு :தொழிலாளி கொலை
/
போதையில் தகராறு :தொழிலாளி கொலை
ADDED : ஜூன் 04, 2025 12:34 AM
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி அருகே, மதுபோதையில் ஏற்பட்ட தகராறில், தாக்கப்பட்ட தொழிலாளி சிகிச்சை பலனின்றி இறந்தார். இதை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.
பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி மனோகரன்,50. இவர், கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து இருந்தார். பஸ் ஸ்டாண்டில் தங்கி வேலைக்கு சென்று வந்தார். இவருடன் சிலர் பஸ் ஸ்டாண்டில் தங்கியிருந்தனர்.
கடந்த, 29ம் தேதி மனோகரன் உள்ளிட்டோர், கோவை ரோட்டில் மது அருந்தினர். அப்போது, மனோகரனுக்கும், மற்றவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், கோபத்தில் மற்றவர்கள் இணைந்து மனோகரனை தாக்கினார். அதில், படுகாயமடைந்த மனோகரனை, அங்கு இருந்தோர் மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
இது குறித்து கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, மனோகரனை தாக்கிய செல்வகுமாரை கைது செய்தனர். இந்த வழக்கை, கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரிக்கின்றனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தேடுகின்றனர்.