ADDED : மார் 25, 2026 09:56 PM

அ நிறம் | அளவு
பெ.நா.பாளையம்: ஆனைகட்டி அருகே காட்டு யானை தாக்கி கேரளா தொழிலாளி பலியானார்.
ஆனைகட்டி அருகே பனப்பள்ளி பழங்குடியின கிராமத்துக்கு பின்புறம், கோழிக்கண்டிமூலை பகுதியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடந்தது. தடாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
இறந்தவர், பாலக்காடு மாவட்டம், சோலையூர் வாச்சாப்பதியை சேர்ந்த மயிலன், 56 என்பதும், ஆனைகட்டியில் தங்கி படித்து வரும் மகன் மணிகண்டனை பார்த்துவிட்டு, 15ம் தேதி ஆனைகட்டி அருகே அடர்ந்த வனப்பகுதியில் சென்றபோது, யானை தாக்கி உயிரிழந்ததும் தெரியவந்தது.
புகாரின் பேரில், மயிலன் உடலை கைப்பற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.
