ADDED : மே 12, 2025 12:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூலுார்; இருகூர் ராம் நகரை சேர்ந்தவர் பிரதீப், 35. குளத்துாரில் உள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக பணிபுரிந்தார். கடந்த, 9ம் தேதி வேலைக்கு சென்றார். இரவு, 9:00 மணிக்கு, உடன் வேலை செய்யும் தங்கதுரை என்பவருடன் பைக்கில் டீ வாங்க சென்றுள்ளார். பைக்கை தங்க துரை ஓட்டியுள்ளார்.
நீலம்பூர் பை - பாஸ் ரோட்டில் சென்ற போது, பின்னால் வந்த லாரி, பைக் மீது மோதியது. இதில், துாக்கி வீசப்பட்ட பிரதீப்புக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தங்கதுரை லேசான காயத்துடன் தப்பினார். அவ்வழியே சென்றவர்கள் இருவரையும் மீட்டு, நீலம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பிரதீப்பை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து, சூலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.