நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனுார்; கோவை, சுந்தராபுரம் அருகே உள்ள எம்.ஜி.ஆர்., நகர் விரிவு, காமராஜ் நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன், 57. இவரது வீட்டில் கட்டுமான பணி நடக்கிறது. காமராஜ் நகரில் வசிக்கும், பீகார் பாட்னாவை சேர்ந்த முகேஷ் பஸ்வானின் சகோதரர் ராஜப்பன் மற்றும் அவரது மாமாவின் மகன் ராகுல்குமார், 25 ஆகியோர், 11ம் தேதி கட்டுமான பணியில் ஈடுபட்டனர்.
மாலை 6 மணியளவில் எதிர்பாராதவிதமாக ராகுல்குமார், கட்டடத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். இடது கையில் காயம் ஏற்பட்டது. கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி இரவு உயிரிழந்தார். சுந்தராபுரம் போலீசார் ரவிச்சந்திரன் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.