/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொழிலாளர்கள் கண்ணீர் புகார் ஒன்றிய அலுவலகத்தில் தொழிலாளர்கள் கண்ணீர் புகார்

ADDED : ஜூலை 23, 2025 09:31 PM
அன்னுார்; அன்னுார் ஊராட்சி ஒன்றியத்தில், 21 ஊராட்சிகள் உள்ளன. கடந்த நிதியாண்டில் சராசரியாக தினமும் 1,500 பேருக்கு மண் ஏரி அமைத்தல், மரக்கன்றுகள் நடுதல், மண் சாலை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தரப்பட்டன. எனினும் இந்த நிதியாண்டு துவங்கி மூன்று மாதங்கள் பணி தரப்படவில்லை. அதன் பிறகு ஒவ்வொரு ஊராட்சியிலும் தலா எட்டு பேருக்கு மட்டுமே தினமும் வேலை தரப்படுகிறது.
இதனால் அதிருப்தி அடைந்த காரேக்கவுண்டம்பாளையம் ஊராட்சியைச் சேர்ந்த 100 நாள் திட்டத் தொழிலாளர்கள் அன்னுார் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வந்தனர். அதிகாரிகளிடம் தொழிலாளர்கள் கண்ணீருடன் பேசுகையில், 'எங்களுக்கு வேறு இடங்களிலும் வேலை தருவதில்லை. வேலை கேட்டு மூன்றரை மாதமாக ஊராட்சி அலுவலகத்திற்கு நடையாய் நடக்கிறோம். எனினும் எங்களுக்கு வேலை தரவில்லை. இதனால் உணவுக்கு கூட வழியில்லை. வாழ வழியில்லாமல் தவிக்கிறோம். உடனடியாக எங்களுக்கு வேலை தர வேண்டும்,' என்றனர்.
இது குறித்து அதிகாரிகள் பதிலளிக்கையில்,' உங்கள் கோரிக்கை குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிவிக்கிறோம்' என்றனர்.