ADDED : ஏப் 14, 2025 06:17 AM
வால்பாறை : கருமலை எஸ்டேட் பகுதியில், ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என அப்பகுதி தொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
வால்பாறையிலிருந்து, 8 கி.மீ., தொலைவில் கருமலை பஜார் அமைந்துள்ளது. இதை சுற்றிலும் ஊசிமலை, வெள்ளமலை, அக்காமலை, பச்சமலை ஆகிய தேயிலை எஸ்டேட்கள் உள்ளன.
இந்த எஸ்டேட்களில், இங்கு ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தேயிலை எஸ்டேட்களில் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்தப்பகுதியில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கூட இல்லாததால், இங்கு வசிக்கும் தொழிலாளர்கள், வால்பாறை நகருக்கு தான் மக்கள் செல்ல வேண்டியுள்ளது.
சாதாரண காய்ச்சல், சளி என்றால் கூட வால்பாறை நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு தான் செல்ல வேண்டியுள்ளது. எனவே கருமலை பஜாரில், துணை சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என, அப்பகுதி தொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

