/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொழிலாளர் தங்கும் விடுதி விரைவில் திறக்கப்படும்! பொதுக்கணக்கு குழு தலைவர் தகவல்
/
தொழிலாளர் தங்கும் விடுதி விரைவில் திறக்கப்படும்! பொதுக்கணக்கு குழு தலைவர் தகவல்
தொழிலாளர் தங்கும் விடுதி விரைவில் திறக்கப்படும்! பொதுக்கணக்கு குழு தலைவர் தகவல்
தொழிலாளர் தங்கும் விடுதி விரைவில் திறக்கப்படும்! பொதுக்கணக்கு குழு தலைவர் தகவல்
ADDED : ஜூலை 30, 2025 08:22 PM

வால்பாறை; வால்பாறையில் சட்டபேரவை பொதுக்கணக்கு குழு தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். காலை, 10:00 மணிக்கு நகராட்சி கலையரங்கில் மாவட்ட கலெக்டர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது.
இதில் பல்வேறு அரசு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு, தங்களது துறைகளின் செயல்பாடுகள் குறித்து விளக்கி பேசினர். தொடர்ந்து, வால்பாறை நகரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர். அதனை தொடர்ந்து புதியதாக கட்டப்பட்டுள்ள தொழிலாளர் தங்கும் விடுதியை ஆய்வு செய்தனர். இதையடுத்து, பொள்ளாச்சி செல்லும் வழியில் ஆழியாறு அணை பகுதியில் குழுவினர் ஆய்வு செய்தனர்.
பொதுக்கணக்கு குழு தலைவர் செல்வப்பெருந்ததை நிருபர்களிடம் கூறிய தாவது: வால்பாறை மலைப்பகுதியில் வசிக்கும் மக்களின்வாழ்வாதாரம் மேம்படுத்த தேவையான நடவடிக்கைளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, வால்பாறையில் நிலவும் மனித -- வனவிலங்கு மோதலுக்கு விரைவில் நல்ல தீர்வு காணப்படும். தமிழகத்திலேயே கோவை அரசு மருத்துவமனையில் 'கேன்சர் ஸ்கிரினிங்' முறையில் மூன்று வகையான பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.
இந்த திட்டம் செயல்படுத்துவதன் வாயிலாக, தமிழகத்தில் கோவை மாவட்டம் முதன்மை மாவட்டமாக மாறியுள்ளது. தேயிலை தோட்ட தொழிலாளர்கள், வால்பாறை நகரில் குறைந்த கட்டணத்தில் தங்குவதற்கு வசதியாக அரசின் சார்பில், 2.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தொழிலாளர் தங்கும் விடுதி விரைவில் பயன்பாட்டுக்கு வரும்.
வால்பாறையில் மழை காலங்களில் பாதிப்பு ஏற்படும் போது அதை தடுக்கும் வகையில் தீயணைப்பு துறையில் அதிநவீன கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு, கூறினார்.
கூட்டத்தில், ஆய்வுக்குழு உறுப்பினர்கள் ஜெயராம் (சிங்காநல்லுார்), கிருஷ்ணமூர்த்தி (போளூர்), அப்துல்சமது (மணப்பாறை), சேகர் (பரமத்தி வேலுார்) சட்ட பேரவை துணை செயலாளர் பால சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.