/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிட்கோ விடுதி கட்டணம் குறைக்க தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு
/
சிட்கோ விடுதி கட்டணம் குறைக்க தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு
சிட்கோ விடுதி கட்டணம் குறைக்க தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு
சிட்கோ விடுதி கட்டணம் குறைக்க தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஆக 07, 2025 10:45 PM

போத்தனுார்; கோவை, சுந்தராபுரம் அடுத்து குறிச்சி, சிட்கோ தொழிற்பேட்டை வளாகத்தில், ரூ.23 கோடி மதிப்பீட்டில், 1.5 ஏக்கர் பரப்பில், 111 அறைகளுடன் கூடிய தொழிலாளர் தங்கும் விடுதி கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு அறையும். 570 சதுரடி பரப்பு கொண்டதாகும். இதில், நான்கு, ஆறு மற்றும் எட்டு பேர் தங்கும் வகையில் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
பல்வேறு வசதிகளுடன் கூடிய இவ்விடுதியை கொசிமா சார்பில் பராமரிக்க, சிட்கோவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. தற்போது தொழில்துறையினர் நேரடியாக இப்பணியை மேற்கொள்கின்றனர்.
இதுகுறித்து கொசிமா முன்னாள் தலைவர் நல்லதம்பி கூறுகையில், ''பொதுகழிப்பிட வசதியுடைய அறையில் தங்கும் ஒருவருக்கு மாதம், ஆயிரத்து, 500, கழிவறை இணைந்த அறையில் தங்கும் ஒருவருக்கு மாதம், இரண்டாயிரம் ரூபாயும் வசூலிக்க திட்டமிட்டு, பராமரிப்பினை நாங்கள் மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது. ஆனால் தற்போது, மூன்றாயிரம், இரண்டாயிரத்து 500 வசூலிக்க அறிவுறுத்தப்பட்டது. அதுபோல் கட்டில் போட்டு தருவதாக கூறினர். தற்போது அதுவும் கிடையாது என கூறிவிட்டனர்.
இதனால் நாங்கள் பராமரிப்பு பணியை மேற்கொள்ளவில்லை. மேலும் ஒவ்வொரு அறையிலும் கூடுதலாக இருவரை தங்க வைக்கவும் அறிவுறுத்தப்பட்டது. அதுவும் ஏற்புடையதல்ல, என்றார்.
சிட்கோ மேலாளர் ஒருவர் கூறுகையில், கொசிமாவுடன் போடப்பட்ட ஒப்பந்தம் கட்டுமான பணி நிறைவுக்கு முன் போடப்பட்டது. தற்போது செலவினங்கள் கணக்கிடப் பட்டு, குடும்ப அறையில் தங்கும் எட்டு பேருக்கு தலா, இரண்டாயிரத்து, 500, இதர அறைகளில் தங்குவோருக்கு தலா, மூன்றாயிரத்து 100 மாத கட்டணம் வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அறைகள் தொழிற்சாலைகளின் பெயரில்தான் பதிவு செய்யப்படும். தற்போது, 15 அறைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மின் இணைப்பு பெற்றவுடன் அறைகள் ஒப்படைக்கப்படும். குடிநீருக்கு மாநகராட்சியில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. தற்போதைக்கு இரு ஆழ்குமாய் கிணற்று நீர் வினியோகம் செய்யப்படும்'' என்றார்.
சுற்றுப் பகுதிகளில் சிறு வீடுகளே மூன்றாயிரம் முதல் மாத வாடகைக்கு கிடைக்கிறது. இச்சூழலில் விடுதியில் தங்க இக்கட்டணம் நிர்ணயித்திருப்பது அதிகம் எனும் எண்ணம் தொழிலாளர்களிடையே பரவியுள்ளது. இதை அதிகாரிகள் கவனத்தில் கொண்டு செயல்பட்டால் விரைவில் விடுதி நிரம்பும்.

