/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொழிலாளர்கள் தங்கும் விடுதி; கலெக்டர், கமிஷனர் ஆய்வு
/
தொழிலாளர்கள் தங்கும் விடுதி; கலெக்டர், கமிஷனர் ஆய்வு
தொழிலாளர்கள் தங்கும் விடுதி; கலெக்டர், கமிஷனர் ஆய்வு
தொழிலாளர்கள் தங்கும் விடுதி; கலெக்டர், கமிஷனர் ஆய்வு
ADDED : நவ 01, 2024 10:41 PM
கோவை ; தமிழ்நாடு சிறு தொழில்கள் வளர்ச்சிக் கழகம் சார்பில், கோவை மாநகராட்சி, 98வது வார்டு சிட்கோ தொழிற்பேட்டை வளாகத்தில் தொழிலாளர்கள் தங்கும் விடுதி கட்டப்படுகிறது. இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. இப்பணியையும், குறிச்சி - குனியமுத்துார் குடிநீர் திட்ட செயல்பாடுகள் குறித்தும், கோவை வரும் தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்ய வாய்ப்பிருக்கிறது.
அதனால், விடுதி கட்டுமான பணியின் தற்போதைய நிலை மற்றும் அம்ருத் திட்டத்தில், எல்.ஐ.சி., காலனியில் மேல்நிலைத்தொட்டி கட்டப்பட்டு, பில்லுார் மூன்றாவது திட்டத்தில் குடிநீர் வழங்குவது தொடர்பாக, கலெக்டர் கிராந்திகுமார் மற்றும் மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.
தெற்கு மண்டல உதவி நிர்வாக பொறியாளர் கனகராஜ், உதவி பொறியாளர்கள் சபரி, ஜெகதீஸ்வரி, சுகாதார அலுவலர் ஆண்டியப்பன் உள்ளிட்டோர், மாநகராட்சி சார்பில் செய்துள்ள பணிகளை விளக்கினர்.
அதன்பின், 95வது வார்டு போத்தனுார் உமர் நகரில் ரோட்டில் தேங்கும் மழை நீரை வெளியேற்ற, சாலையின் குறுக்காக குழாய் பதித்து ராஜவாய்க்காலில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணிகளையும் கலெக்டரும், மாநகராட்சி கமிஷனரும் ஆய்வு செய்தனர்.