/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேயிலை தோட்டத்தில் சிறுத்தை அச்சத்தில் தொழிலாளர்கள்
/
தேயிலை தோட்டத்தில் சிறுத்தை அச்சத்தில் தொழிலாளர்கள்
தேயிலை தோட்டத்தில் சிறுத்தை அச்சத்தில் தொழிலாளர்கள்
தேயிலை தோட்டத்தில் சிறுத்தை அச்சத்தில் தொழிலாளர்கள்
ADDED : ஏப் 23, 2025 10:48 PM

வால்பாறை; வால்பாறை அருகே, தேயிலை தோட்டத்தில் சிறுத்தை பதுங்கியிருப்பதை கண்டு, தொழிலாளர்கள் பீதியடைந்துள்ளனர்.
வால்பாறையை சுற்றியுள்ள எஸ்டேட் பகுதியில், பகல் நேரத்தில் யானை மற்றும் காட்டுமாடுகள் தேயிலை தோட்டத்தில் முகாமிடுவதால், தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட முடியாமல் தவிக்கின்றனர். இந்நிலையில், பழைய வால்பாறையில், தேயிலை தோட்டத்தில் பகல் நேரத்தில் சிறுத்தை பதுங்கியிருப்பதை தொழிலாளர்கள் கண்டனர். தொழிலாளர்களும், அவ்வழியாக சென்ற மக்களும் அச்சத்தில் ஓட்டம் பிடித்தனர். அவ்வழியாக சென்ற சுற்றுலா பயணியர் சிறுத்தையை வீடியோ எடுத்தனர்.
வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'சீதோஷ்ண நிலை மாற்றத்தால், வால்பாறையில் வனவிலங்குகள் பகல் நேரத்தில் வெளியே வரத்துவங்கியுள்ளன. பொதுமக்கள் கவனமாக இருப்பதோடு, பகல் நேரத்தில் குழந்தைகளை வெளியில் தனியே விளையாட அனுப்பக்கூடாது.
வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், சுற்றுலா பயணியர் செயல்படக்கூடாது. மீறினால், வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.