/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர் ஆர்ப்பாட்டம்
/
கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 30, 2025 11:21 PM

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தை பாதுகாக்க கோரி, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. அதன் தொடர்ச்சியாக, பொள்ளாச்சி வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய அலுவலகங்கள் முன்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது. தாலுகா செயலாளர் பட்டீஸ்வரமூர்த்தி தலைமை வகித்தார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பயனாளிகளுக்கு, நிலுவையில் உள்ள இரண்டாம் மாத சம்பள பாக்கியை உடனே வழங்க வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தை, 100 வேலை நாட்களாக இருப்பதை, 200 நாட்களாக உயர்த்த வேண்டும்.
தேசிய வேலை உறுதி சட்டத்தில் ஒவ்வொரு பயனாளிகளுக்கும், ஒரு நாள் கூலி, 600 ரூபாய் வழங்க வேண்டும். அனைத்து பேரூராட்சிகளுக்கும் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் மகாலிங்கம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஜெகநாதன், சி.ஐ.டி.யு., தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரி தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சரவணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் ஸ்டாலின் பழனிச்சாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.